மகளிர் ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இன்று (16) இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் போட்டி மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதேவேளை நேற்று (15) நடைபெற்ற மகளிர் ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
நாணய சுழற்சியைவென்று முதலில் துடுப்பாட்டத்தை செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்கள் பெற்றது.
இதையடுத்து 119 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.