ஈரோடு இடைத்தேர்தலில் 'வோட்டர் ஐடி' இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் | தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க மாற்று ஆவணங்கள் குறித்து தேர்தல் ஆண்னையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக கீழ் காணும் சில அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை காண்பிக்கலாம். 

i) ஆதார் அட்டை

ii) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை;

iii) வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய) 

iv) தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை;

v) ஓட்டுநர் உரிமம்;

vi) நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD);

vii) தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வாங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை;

viii) இந்திய கடவுச் சீட்டு

ix) புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்;

x) மத்திய/ மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி
அடையாள அட்டைகள்; 

xi) பாராளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளஅலுவலக அடையாள அட்டை;

xii) இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்டும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை (UDID).

மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.