உக்ரைன் போர் ரஷ்யர்களின் தாம்பத்ய வாழ்க்கை மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம்: நேரம் பார்த்து அடித்த அமெரிக்கா…


உக்ரைன் மீது தான் தொடர்ந்த போர், தன் நாட்டு மக்களின் தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் என புடின் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.

நேரம் பார்த்து அடித்த அமெரிக்கா

உக்ரைன் போரால் பெட்ரோல் விலை உயர்ந்தது, பல நாடுகளின் உணவுப்பொருட்கள் விலை உயர்ந்தது, சில நாடுகள் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் பட்டினி நிலைக்குச் செல்லும் ஒரு அபாயம் உருவானது.

தான் துவக்கிய போர் ஏழை மக்கள் வயிற்றில் அடிப்பதைப் பார்த்தும் கொஞ்சமும் கவலைப்படவில்லை புடின். இன்று, அவர் துவக்கிய போர் அவரது மக்களின் இடுப்பில் அடிக்கத் துவங்கியுள்ளது.

ஆம், தாம்பத்ய வாழ்க்கையில் ஆண்களின் சில பிரச்சினைகளுக்கு உதவக்கூடிய வயாக்ரா என்னும் மாத்திரைகளைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான Viatris, ரஷ்யாவுக்கு மாத்திரைகள் வழங்குவதை நிறுத்திக்கொண்டுள்ளது.

அதைவிடக் கொடுமை, உக்ரைன் போரைக் காரணம் காட்டியே அந்த நிறுவனம் ரஷ்யாவுக்கு வயாக்ரா மாத்திரைகள் வழங்குவதை நிறுத்திக்கொண்டுள்ளதுதான்.

உக்ரைன் போர் ரஷ்யர்களின் தாம்பத்ய வாழ்க்கை மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம்: நேரம் பார்த்து அடித்த அமெரிக்கா... | Viagra Russia Putin Ukraine War

Credit: Reuters

Viatris நிறுவனம் அளித்துள்ள விளக்கம்

வர்த்தகக் கட்டுப்பாடுகள், தடைகள், விநியோகம் மற்றும் ஊழியர் பிரச்சினைகள் மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகள் வயாக்ரா மாத்திரை தயாரிப்பை பாதித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது Viatris நிறுவனம்.

இதற்கிடையில், இந்த தகவல் வெளியானதும், நேற்றே ரஷ்ய அறிவியலாளர்கள் வயாக்ராவுக்கு இணையான மாத்திரைகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

வயாக்ரா என்பது என்ன?

வயாக்ரா என்ற பெயரில் விற்பனையாகும் Sildenafil என்னும் மருந்து, ஆண் மலட்டுத்தன்மை முதல் சில பாலியல் செயல்பாட்டுக் குறைபாடுகளுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆகும்.

தாம்பத்ய வாழ்க்கையில் உதவும் இந்த வயாக்ரா மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பயன்படுத்தவேண்டும். காரணம், அது தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.
 

உக்ரைன் போர் ரஷ்யர்களின் தாம்பத்ய வாழ்க்கை மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம்: நேரம் பார்த்து அடித்த அமெரிக்கா... | Viagra Russia Putin Ukraine War

Credit: Alamy



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.