உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்


இலங்கையில் உணவுப் பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகிய உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

இந்த விடயத்தை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விலை அதிகரிப்பு

இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல் | Friend Rice Kottu Lunch Packets Price In Sri Lanka

இதன்படி உணவுப் பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த விலை அதிகரிப்பானது உணவுப் பொதிகளை கொள்வனவு செய்து தமது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்தி கொள்ளும் தொழிலாளர்களுக்கு பேரடியாய் அமையும் என பலரும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.