கோவை: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பல ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது எனவும் கோவையில் இதயவியல் சங்க மாநாட்டை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
