மதுரை: தூத்துக்குடி என்எல்சி முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம் நடத்த தடை கோரிய வழக்கில் ஆலைக்கு வெளியே ஒரு கி.மீ. தூரத்தில் ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. வேலைக்குச் செல்லும் பிற ஊழியர்களை தடுக்கக் கூடாது எனவும் விரும்பத்தகாத செயல்களில் ஊழியர்கள் ஈடுபட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
