வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ‛பா.ஜ.,வும், சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று கவர்னர் எவ்வாறு கூறலாம்? கவர்னர்கள் அரசியல் அரங்கிற்குள் நுழையக் கூடாது’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சி பிளவுப்பட்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என பிரிந்தது. இதில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து வருகிறது.
இந்த நிலையில் சிவசேனா கட்சி மற்றும் சிவசேனா யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

விசாரணையின் சில துளிகள்…
ஷிண்டே தரப்பு வழக்கறிஞர்: உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த பிறகு, இந்த வழக்கு என்பது முடிந்து போன ஒன்று.
தலைமை நீதிபதி சந்திரசூட்: இல்லை. நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்குமாறு கவர்னர் உத்தரவிடாவிட்டால் உத்தவ் ராஜினாமா செய்திருக்க மாட்டார். போதிய எம்எல்ஏ.,க்கள் ஆதரவு இல்லாததால் தான் அவர் ராஜினாமா செய்தார்.
மஹாராஷ்டிர கவர்னரின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: யாரை எதிர்த்து சட்டசபை தேர்தலை உத்தவ் தாக்கரே சந்தித்தாரோ, அவர்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளார்.
தலைமை நீதிபதி: பா.ஜ.,வும் சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என கவர்னர் எவ்வாறு கூறலாம்? கவர்னர் அரசியல் அரங்கத்திற்குள் நுழையக்கூடாது. இந்த வழக்கு மிகவும் சிக்கலான ஒன்று என்பதால் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றலாமா?
7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றவது குறித்த தலைமை நீதிபதியின் யோசனைக்கு ஷிண்டே தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement