காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை

பலாங்கொடை, வட்டவள, போவத்த ஆகிய பிரதேசங்களில் பெரும் பிரச்சினையாக இருந்த காட்டு யானைகள் கிராமங்களை தாக்கி விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் ,சமனல குளத்திலிருந்து முல்கம ஊடாக சூரியவவ வரையிலான 54 கிலோமீற்றர் தூரத்திற்கு 03 மாதங்களுக்குள் யானை வேலி அமைக்குமாறு வனசீவராசிகள் திணைக்களத்திற்கு வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பணிப்புரை விடுத்துள்ளார்.

காட்டு யானைகளின் தாக்குதலினால் மனித உயிர்கள் மற்றும் பயிர் நிலங்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கான விசேட கலந்துரையாடல் ,வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் கடந்த 10 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இம்புல்பே பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்களின்  பிரச்சினையாக இருந்த, கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை, மீண்டும் காட்டுக்கே திருப்பி அனுப்புவதற்காக 10 நாள் திட்டம் ஒன்றை விரைவாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பல்நோக்கு அலுவலர்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

மேலும்இ அந்த பகுதி மக்கள் யானைகளுக்கு எதிரான துப்பாக்கிப் பிரயோகத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.