நெல்லை: தென்காசி மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்தவர் பால் (58). இவர் தனது நிலத்தில் கிணறு வெட்ட சக்திவேல் என்பவரிடம் (32) குத்தகைக்கு விட்டிருந்தார். கிணறு தோண்டியபோது பாறையை வெடி வைத்து தகர்க்க நேற்று ஆசீர் சாலமோன் (26), அரவிந்த் (24), ராஜலிங்கம் (56) ஆகியோர் கிணற்றின் மேல் பகுதியில் உட்கார்ந்து டெட்டனேட்டரை சோதனை செய்தனர். அப்போது திடீரென வெடித்து சிதறியது. இதில் அரவிந்த், ஆசீர் சாலமோன், ராஜலிங்கம் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
