சேலம்: கிராமப்புற மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சேலத்தில் 4 மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் அதிகாரிகள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
