குளம் மற்றும் கிணற்றை காணவில்லை என்று விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், இவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறி 2017 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கணேசன் இடம் புகார் அளித்தார். இதுகுறித்து அப்போது கண்டுகொள்ளப்படாமல் இருந்ததால் 2017 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை 12 வாரத்துக்குள் அந்த குளத்தை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உத்தரவிட்டது. 12 வார கால அவகாசம் முடிந்த பின்னரும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இவர் சென்று நேரில் கேள்வி கேட்கும் போது இரண்டு ஆண்டு காலம் தடை அவகாசம் பெற்று இருப்பதாக கூறி உள்ளனர்.
மீண்டும் தகவல் அறியும் சட்டத்தை தொடர்பு கொண்டு உள்ளார். அதற்குப் பின்னர் தான் தெரிய வருகிறது அந்த கால அவகாசம் இரண்டு வாரங்கள் மட்டுமே என்று இரண்டு ஆண்டுகள் இல்லை என்பது தெரியவந்தது. மக்களையும் நீதிகளையும் ஏமாற்றுவதாக வேதனை தெரிவித்தார். சட்டத்தையும் நீதியையும் காப்பாற்ற உயிரையும் தியாகம் செய்வதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இலுப்பூர் தீயணைப்பு துறையினர் மேல்நிலைப்பள்ளி இருந்த காந்தியவாதியான செல்வராஜை பத்திரமாக மீட்டனர்.