கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய பின்னணியில் மகிந்த


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தீர்மானங்கள் தவறானவை என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.

மேலும்,கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய பின்னணியில் மகிந்த ராஜபக்ச உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எமது கட்சியைப் பொறுத்தவரை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கட்சியின் கொடியை மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தமையில் தவறு இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய பின்னணியில் மகிந்த | Srilanka Goverment Against Protest Gotapaya

தன்னிச்சையாக கட்சியை மைத்திரிபாலவிடம் ஒப்படைத்த பின்னரே கட்சிக்கு இது நடந்தது. கட்சியை இழந்தோம். அதற்கு மகிந்த ராஜபக்ச தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியமைக்கு மகிந்த ராஜபக்ச ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அவர் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் பொற்காலத்தை உருவாக்கினார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது அவர் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.