சேலம்: சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக கள ஆய்வில் ஈடுபட்டுள்ளார். காவல் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்திய நிலையில் இன்று ஆட்சியர்கள், வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறார். ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
