திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மார்க் மதுக்கடை ஒன்று விற்பனை நேரத்தில் மூடியதால், மது பிரியர் என்று அழைக்கப்படும் குடிகார தமிழன் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை நெடுஞ்சாலை ஓரம் கும்மிடிப்பூண்டி அருகே தமிழக அரசின் மதுபான கடையான டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த டாஸ்மாக் கடை நேற்று மாலை 6 மணி முதல் ஏழு முப்பது மணி வரை மூடி இருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்நேரத்தில் மது அருந்த வந்த மது பிரியர் ஒருவர் விற்பனையாளரிடம், விற்பனை நேரத்தில் கடை திறந்து விற்பனை செய்யும் நேரத்தில் ஏன் மூடி விட்டு ஏன் மூடினீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது குறித்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி குடிமகன்களால் பரப்பப்பட்டு வருகிறது.