தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் டெலிவரி பார்ட்னர்களுக்கு ரெஸ்ட் பாயிண்ட்களை Zomato அறிவித்துள்ளது.
இந்த ரெஸ்ட் பாயிண்டுகளில் Zomato வில் உணவு டெலிவரி பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் ஓய்வு எடுப்பதுடன், மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி, அதிவேக WiFi, முதலுதவி, சுத்தமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளும் இருக்கும் என Zomato CEO தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.
ரெஸ்ட் பாயிண்டுகளை ஸ்விக்கி போன்ற பிற நிறுவனங்களின் டெலிவரி பார்ட்னர்களும் பயன்படுத்தலாம் எனவும் அறிவித்துள்ள தீபிந்தர் கோயல், இதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த சூழலை உருவாக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.