திரிபுரா தேர்தல் விறுவிறு: 2023-ல் காத்திருக்கும் ட்விஸ்ட்- வியூகம் வகுத்த பாஜக சிஎம் மாணிக் சஹா!

திரிபுரா மாநிலத்தில் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கான 28.14 லட்சம் வாக்காளர்களை கொண்ட தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 259 வேட்பாளர்கள் மொத்தமாக இந்த தேர்தல் களத்தில் உள்ளனர். காலை 11 மணி நிலவரப்படி 31.23 சதவீத வாக்குகள் திரிபுரா மாநில தேர்தலில் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இந்த தேர்தலில் பாஜக மொத்தம் 55 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜகவின் கூட்டணி கட்சியாக இருக்கும் ஐபிஎப்டி 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் முறையே 13 மற்றும் 47 இடங்களில் கூட்டணியாக போட்டியிடுகிறது. மேலும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

ஆளும் பாஜக தனது இடத்தை மீண்டும் தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் இடது சாரி கூட்டணி பாஜகவை வீழ்த்த வேண்டும் என ஒரு புறம் வேலைகளை செய்து வருகின்றனர்.

பிபிசி ரெய்டு; பாஜகவிற்கு ஹிட்லரே மேல்- மம்தா பானர்ஜி கடும் தாக்கு!

இன்னொரு பக்கம் திப்ரா மோதா கட்சியும், பழங்குடியின மக்களுக்கு தனி மாநிலம் என்ற கொள்கையுடன் களத்தில் இறங்கியுள்ளது. எனவே திரிபுராவை பொறுத்தவரை மும்முனை தேர்தல் நடைபெற்று வருகிறது என கூறலாம்.

இந்த நிலையில், திரிபுராவின் பாஜக முதல்வரான டாக்டர் மாணிக் சஹா, இந்த தேர்தலில் நாங்கள் வெல்வது உறுதி என நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது; 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 36 இடங்களை கைப்பற்றியது. இந்த வருடம் அதை விட அதிக இடங்களை நாங்கள் கைப்பற்றுவோம். எங்கள் வெற்றிக்கான பாதை மிகவும் சுலபமாக இருக்கிறது.

அதானி விஷயத்தில் செபி என்ன செய்கிறது? மத்திய அரசு அழுத்தமா? காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

இடது சாரிகளுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் பலமாக இருக்கிறது என அவர்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அவ்வளவு உறுதியாக இருந்தால் ஏன் தனித்து போட்டியிடவில்லை என கேள்வி எழுப்பினார். கம்யூனிஸ்ட் கட்சியினர் கொலைகளை செய்து வருகின்றனர். எனவே அவர்கள் மீண்டும் ஒரு போதும் ஆட்சிக்கு வர கூடாது. பல மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பாஜகவை பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை செய்து வருகிறது. மத்திய மற்றும் மாநிலத்தில் இருக்கும் பாஜக பழங்குடியின மக்கள் நன்மைக்காக பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. பாஜகவை பொறுத்தவரை ஒரு குடும்பமாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் திரிபுராவின் பாஜக மட்டும் இல்லை, தேசிய கட்சியாகவும் செயல்பட்டு வருவதாக மாணிக் சஹா கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.