திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூா் பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை புகுந்த மா்ம கும்பல், ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினா் ஆந்திரா, கா்நாடகா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் முகாமிட்டு தீவிர விசாரணை […]
