மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக தேனியில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளதாக, அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த அந்த அறிவிப்பில், மக்கள் நலனுக்காக நாளும் உழைத்திட்ட நம் அன்பு தாய், தமிழ்நாட்டின் நலன்களை யாருக்கும், எதற்கும் அஞ்சாமல் காத்து நின்ற துணிவின் உருவம், தமிழ்ச் சமுதாயம் தாயாக கொண்டாடுகிற தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் பிப்ரவரி 24ம் தேதியன்று மாலை 4 மணியளவில் தேனி மாவட்டம், பங்களாமேடு அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியோடு நடைபெற உள்ளது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கலந்து கொண்டு ஏழை, எளியோருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி, எழுச்சி உரையாற்றுகிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமைக் கழக நிர்வாகிகள், அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட/வார்டு, ஊராட்சி, கிளைக் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், 24.02.2023 முதல் தமிழகத்தின் அனைத்து கழக மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கீழ்காணும் அட்டவணைப்படி பொதுக்கூட்டங்கள், ஏழை- எளியோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை மாவட்ட கழக செயலாளர்களுடன், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து சிறப்புற நடத்திட வேண்டுமென அன்போடு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.