தேனி மாவட்டம் மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகம் உள்ளது. அங்கு மணலாறு இருந்து மகாராஜாமெட்டு செல்லும் வழியில் கேன்டீன் ஒன்று இருக்கிறது. அந்த பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக மக்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். மேலும், அப்பகுதி மக்களிடமும் விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது.