வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : சர்வதேச ஊடக நிறுவனமான, பி.பி.சி.,யின் புதுடில்லி அலுவலகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று நடந்த வருமான வரித் துறையினர் ஆய்வு பணியை நிறைவு செய்தனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம்2002ல் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப் படத்தை வெளியிடுவதாக அறிவித்தது. அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், கலவரத்துக்கும் தொடர்பு உள்ளதுபோல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
![]() |
இந்த ஆவணப் படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், புதுடில்லி மற்றும் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள, பி.பி.சி.,யின் அலுவலகங்களில், வருமான வரித் துறையினர் கடந்த 14-ம் தேதி முதல் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுப் பணி, தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் நடந்தது. சர்வதேச வரி முறைகேடு மற்றும் தன் துணை நிறுவனங்களுக்குள் நிதி மாற்றத்தில், பி.பி.சி., மோசடியில் ஈடுபட்டுள்ள புகார் அடிப்படையில் இந்த ஆய்வு பணி நடைபெறுவதாக வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 60 மணி நேர ஆய்வு பணி இன்று இரவு 10:45 மணிக்கு நிறைவு அடைந்தது. நாளையும் ( பிப்.17) தொடரும் என கூறப்படுகிறது.இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாக, பி.பி.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement