மகா சிவராத்திரி 2023: ஈஷா யோகாவிற்கு வந்த பெரிய சிக்கல்… ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்!

ஈஷா யோகா என்றாலே கோவையில் உள்ள பிரம்மாண்ட ஆசிரமும், அங்கிருக்கும் ஆதியோகி சிலையும் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும்
மகா சிவராத்திரி
விழா மிகவும் பிரபலம். பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து, உயர் பதவிகளில் இருப்பவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து, ஒரே நேரத்தில் பல லட்சம் பேரை பார்க்க வைத்து சத்குரு ஜக்கி வாசுதேவ் திக்கு முக்காட செய்து விடுவார்.

ஈஷா யோகா மைய சர்ச்சைகள்

அதேசமயம் இவரது ஆசிரமங்களுக்கு யோகா கற்க செல்லும் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது, நிலம் ஆக்கிரமிப்பு, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பறித்தது என சர்ச்சைகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆண்டு உலக சாதனை படைக்கும் அளவிற்கு மகா சிவராத்திரி விழாவை நடத்தினர். ஆஸ்கர் விழாவை நேரலையில் பார்த்தவர்களை விட அதிகம் பேர் ஈஷா யோகாவின் மகா சிவராத்திரி நிகழ்வை பார்த்தார்களாம்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

இம்முறை அதைவிட பெரிதாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது தான் ஹைலைட். இதையொட்டி போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்கள் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பலரும் எதிர்ப்பு

இதில் தந்தை பெரியார் திராவிடர் இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், வெள்ளியங்கிரி காப்பு இயக்கம், வெள்ளியங்கிரி மலை பழங்குடி மக்கள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்டவை அடங்கும்.

கோவை தபால் நிலையம்

கோவையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கடிதம் அனுப்ப வந்த அவர்கள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஈஷாவிற்கு வருவதை எதிர்த்து பதாகைகளை ஏந்தி கண்டனத்தை பதிவு செய்தனர். அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் சில…

ஈஷா யோகா நிறுவனம் பழங்குடி மக்களின் நிலத்தை அபகரித்துள்ளதுயானைகளின் வாழ்விடத்தையும், நொய்யல் நதி உற்பத்தியாகிற இடத்தையும் ஆக்கிரமித்து சுற்றுப்புற சுவர்களை எழுப்பியுள்ளதுஈஷா நிறுவனத்தை எதிர்த்து பழங்குடி மக்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து போராடி வருகின்றனர்.இத்தகைய சூழ்நிலையில் பழங்குடியின மக்களில் இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த திரவுபதி முர்மு ஈஷாவில் நடைபெறுகிற மகா சிவராத்திரி நிகழ்விற்கு வருகை தருவது அந்த சமூக மக்களின் மனங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட ஈஷாவிற்கு குடியரசுத் தலைவர் வருவதை எதிர்க்கிறோம் என குறிப்பிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.