மதுரை: மதுரையில் இருந்து கோவைக்கு ஆம்புலன்ஸ் மூலம் இதயம் மற்றும் கல்லீரல் எடுத்துச்செல்லப்பட்டு 2 நோயாளிகளுக்கு பொறுத்தப்படவுள்ளது. இரு உயிர்களை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஒரு நாள் பட பாணியில் நோயாளிகளுக்கு உடல் உறுப்புகளை பொருத்துவதற்காக மதுரையில் இருந்து இதயம் மற்றும் கல்லீரல் ஆகியவை ஆம்புலன்ஸ் மூலம் கோயம்பத்தூர்க்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து கோவை டி.எஸ்.பி. மருத்துவமனைக்கு இதயமும், புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனைக்கு கல்லீரலும் இரண்டு நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே சாலை விபத்தில் காயமுற்ற செல்வம் என்பவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் மூளை சாவு அடைந்துள்ளார். இந்த நிலையில் அவரது இதயம் கோவை மருத்துவமனையில் சந்திரமோஹன் என்ற நோயாளிக்கு பொருத்துவதாகவும் கல்லீரளை புதுக்கோட்டை மருத்துவமனையில் ஒரு வாலிபருக்கு பொருத்துவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அவரது உடல் உறுப்புகளை மதுரை சிந்தாமணி, திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கோயம்பத்தூர் செல்லப்பட்டு வருகின்றது . இதற்காக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துரையின் அனைத்து சந்திப்புகளிலும் பச்சை விளக்கு தடையின்றி எறிவதற்கான வழிவகை செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் தடை இல்லாமல் கோயம்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மேலும் இதற்காக மதுரை மாநகர மற்றும் புறநகர போக்குவரத்து காவல்துறை 200க்கும் மேற்பட்டோர் பணியமதப்பட்டுள்ளனர். இரு உயிர்களை காப்பாற்றுவதற்காக மதுரையில் இருந்து கோவைக்கு சென்னையில் ஒரு நாள் பட பாணியில் எடுத்து சொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது.