மூளை செல்கள் பாதிப்பு நோயால் அவதியும் ஹாலிவுட் நடிகர்| Hollywood actor suffering from brain cell damage disease

நியூயார்க்: பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ், மூளை செல்கள் பாதிப்பு நோயால் அவதியுறு தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புரூஸ் வில்லிஸ்,66, இவரது நடிப்பில் வெளியான ‘டைஹார்ட் ‘ சீரியல் படங்கள் பெரும் வெற்றி பெற்றன.பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக 2022-ல் சினிமாவை விட்டு விலகினார்.

இந்நிலையில் நேற்று இவருக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு குறித்து அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாவது,
புரூஸ் வில்லிஸ் மூளை பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் பாதித்தவர்களின் மூளை செல்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ,செயல்திறனில் குறைபாடும், , பேச்சில், எழுத்தில் ,, புரிந்து கொள்வதில் தடுமாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.