லிப் லாக் சர்ச்சை குறித்து ஓப்பனாக பேசிய அனிகா சுரேந்திரன்!

குழந்தை நட்சத்திரமாக ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இளம் நடிகை அனிகா சுரேந்திரன்.  அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்-நயன்தாரா மகளாக நடித்து மேலும் பிரபலமானார், அஜித் மகள் என்று சொன்னாலே அனிகா முகம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும் என்கிற அளவிற்கு இவர் தமிழ் திரையுலகில் பிரபலமாகிவிட்டார்.  இவர் நயன்தாரா ஜாடையில் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் ஒப்பிட்டு கூறி வருகின்றனர்.  படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தது மட்டுமின்றி இவர் அடிக்கடி போட்டோஷூட் செய்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.  தற்போது 18 வயதாகும் இவர் ‘ஓ மை டார்லிங்’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார், சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தின் ட்ரைலர் அப்படி என்ன ஷாக்கான தருணத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது என்றால், இளம் நடிகை அனிகாவின் நெருக்கமான காட்சி தான்.  ‘ஓ மை டார்லிங்’ படத்தின் ட்ரைலரில் அனிகா மற்றும் படத்தின் நாயகன் மெல்வின்.ஜி.பாபு இருவரும் லிப்லாக் கொடுக்குமாறும், இன்னும் சில நெருக்கமான காட்சிகளும் இடம் பெற்று இருந்தது.  இந்த காட்சியை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர், இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து நெட்டிசன்கள் பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இதுபோன்ற நெருக்கமான காட்சியில் அனிகா நடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தான் ஏன் இதுபோன்ற காட்சியை தேர்ந்தெடுத்தேன்? எதனால் இந்த காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன் என்பது குறித்து நடிகை அனிகா விளக்கமளித்துள்ளார்.

anika

லிப்லாக் காட்சியில் நடித்தது குறித்து இளம் நடிகை அனிகா கூறுகையில்,  ‘ஓ மை டார்லிங்’ ஒரு முழு நீள காதல் படமாகும்.  இந்த கதையயம்சம் கொண்ட படத்தில் முத்தக் காட்சிகளையும், நெருக்கமான காட்சிகளையும் தவிர்க்க முடியாது என்பதையும் நெருக்கமான காட்சிகளின் முக்கியத்துவத்தையும் படத்தின் ஸ்க்ரிப்டை விவரிக்கையில் படத்தின் இயக்குனர் என்னிடம் கூறினார்.  கதைக்கு தேவைப்பட்டதால் தான் அதுபோன்ற காட்சியில் நடிக்க சம்மதித்தேன், கண்டிப்பாக படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ஆபாசமாக இருக்காது என்றும், படத்தை பார்க்கும்போது பார்வையாளர்கள் அதனை புரிந்துகொள்வார்கள் என்றும் நடிகை அனிகா விளக்கமளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.