AK62: ஏ.கே. 62 அப்டே ஏன் இன்னும் வரலனு தெரியுமா?: இன்னொரு அதிர்ச்சி செய்தியும் இருக்கு

Ajith Kumar ak62 movie update:அஜித் நடிக்கவிருக்கும் ஏ.கே. 62 பட அப்டேட் ஏன் இன்னும் வெளியாகவில்லை என்று தெரிய வந்துள்ளது.

ஏ.கே. 62அஜித் குமார் நடிக்கவிருக்கும் ஏ.கே. 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அறிவிப்பு கடந்த வாரமே வரும் என்று கூறப்பட்ட நிலையில் இன்னும் வராததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பிப்ரவரி 16ம் தேதி காலை படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என லைகா ட்வீட் செய்ததும் அது ஏ.கே. 62 அப்டேட் தான் என ரசிகர்கள் நம்பினார்கள்.

ஏமாற்றம்திருவின் குரல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டதை பார்த்த அஜித் ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். ஏ.கே. 62 அப்டேட் எப்பொழுது தான் வரும், ஏன் இந்த தாமதம் என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் தான் அந்த தாமதத்திற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

​Ak62, Lyca:டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லைகா: திட்டித் தீர்க்கும் அஜித் ரசிகர்கள்

தலைப்புமுன்னதாக ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. அதன் பிறகு விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்கள். விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஏ.கே. 62 என்கிற தலைப்பை மீண்டும் பயன்படுத்த விரும்பவில்லையாம். நல்ல தலைப்புடன் மாஸாக அறிவிப்பை வெளியிட விரும்புகிறார்களாம். அதனால் தான் இந்த தாமதமாம்.
அறிவிப்புதலைப்பு அமைந்ததும் அறிவிப்பு வெளியிடுவார்களாம். இதற்கிடையே தன் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் தூக்கலாக இருக்க வேண்டும் என மகிழ் திருமேனியிடம் தெரிவித்துள்ளாராம் அஜித். இதையடுத்து அவர் ஸ்க்ரிப்ட்டில் திருத்தம் செய்து கொண்டிருக்கிறாராம். அஜித் கேட்டபடி ஸ்க்ரிப்ட் தயார் செய்ய நேரம் வேண்டும் என்று கூறியிருக்கிறாராம் மகிழ் திருமேனி.
தீபாவளிAK62:பொங்கலுக்கு துணிவு, தீபாவளிக்கு ஏ.கே. 62: டபுள் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகாஸ்ஏ.கே. 62 படத்தை தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய முடிவு செய்தார்கள். ஆனால் ஸ்க்ரிப்ட் திருத்த வேலை உடனே முடியாது என்பதால் இந்த தீபாவளி தல தீபாவளியாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. தல தீபாவளியை எதிர்பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் அதிர்ச்சியும், கவலையும் அடைவார்கள். இதற்கிடையே லண்டனுக்கு சென்ற அஜித் குமார் சென்னை திரும்பிவிட்டார். மகிழ் திருமேனியும் நாடு திரும்பியிருக்கிறார்.

ரசிகர்கள்ஏ.கே. 62 அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பதை பார்த்து சமூக வலைதளவாசிகள் அவர்கள் மீது பாவப்படுகிறார்கள். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மாறினாலும் அப்டேட் கொடுக்காமல் அஜித் ரசிகர்களை அலையவிடுவது மட்டும் மாறவில்லையே என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.