Anushka Shetty: அச்சச்சோ.. அனுஷ்காவுக்கு இப்படியொரு நோயா.?: ரசிகர்கள் அதிர்ச்சி.!

தமிழ், தெலுங்கில் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவருக்கு, பாகுபலி படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்நிலையில் அனுஷ்கா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய நடிகை அனுஷ்கா, அதன்பிறகு உடல் எடையை குறைக்க பெரும் அவதிப்பட்டார். இதனால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக அமையவில்லை. அதன்பின்னர் உடல் எடையை குறைப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார் அனுஷ்கா.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனிடையில் மாதவனுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்த சைலன்ஸ் படம் வெளியானது. இதில் காது, கேட்காதா, வாய் பேச முடியாத பெண்ணாக அனுஷ்கா நடித்திருந்தார். சவாலான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தாலும், இப்படமும் அவருக்கு தோல்வியை தந்தது. அதன்பின்னர் சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவும் அமையாமல் இருந்தார் அனுஷ்கா.

இந்நிலையில் அனுஷ்கா அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில், “எனக்கு சிரிக்கும் வியாதி இருக்கிறது. சிரிப்பதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு நீங்க நினைக்கலாம். ஆனால் இது வேற மாதிரியான சிரிப்பு. சிரிக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்து நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன்.

Anikha Surendran: சர்ச்சையை கிளப்பிய லிப்லாக், படுக்கையறை காட்சிகள்: அனிகா ஓபன் டாக்.!

நகைச்சுவை காட்சிகள் வந்தால் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருப்பேன். என்னால் அந்த சமயத்தில் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது. ஷுட்டிங் ஸ்பாட்டில் நான் சிரிக்க ஆரம்பிச்சா படப்பிடிப்பை நிறுத்தும் நிலைக்கூட வரும். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் சிரித்துக்கொண்டே இருப்பேன் என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி எனும் நோயால் பாதிபக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். நடிகை மம்தா மோகன்தாசும் தனக்கு சரும பாதிப்பு இருப்பதாக கூறினார். இந்நிலையில் தற்போது அனுஷ்கா தனக்கு சிரிக்கும் நோய் இருப்பதாக தெரிவித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vaathi: ‘வாத்தி’ படத்திற்கு எதிராக பரபரப்பு புகார்: திட்டமிட்டபடி வெளியாகுமா.?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.