Bakasuran: பகாசூரன் படத்தை மிரட்டி வாங்கியதா ரெட் ஜெயன்ட் மூவிஸ்?: உண்மையை சொன்ன தயாரிப்பாளர்

Bakasuran pressmeet: பல படங்களை வெளியிட்டு வரும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பற்றி பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் தேனப்பன்.

பகாசூரன்மோகன் ஜி. இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவன், நட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கும் பகாசூரன் படம் பிப்ரவரி 17ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தேனப்பன் கூறியதாவது, பகாசூரன் பா. ரஞ்சித்திற்கு போட்டியான படம் என்பதை வெளிப்படையாகவே சொல்கிறேன். பா. ரஞ்சித்திற்கு கிடைக்கும் வரவேற்பு மோகன் ஜி.க்கு கிடைப்பது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.

மோகன் ஜி.பகாசூரன் சமூகத்திற்கு தேவையான படம். இந்த படம் மூலம் மோகன் ஜி. தன்னை யார் என்று நிரூபிப்பார். பகாசூரன் ரிலீஸான பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்வார் மோகன். ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை மிரட்டி வாங்கவில்லை. அந்த நிறுவனம் நன்றாக செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தேனப்பன் மேலும் தெரிவித்தார்.
ரெட் ஜெயன்ட்ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்ட படங்களின் வசூல் விபரம் வெளியில் தெரிகிறது. முன்பு வெளியான படங்களின் வசூல் விபரம் வெளியே வந்தது இல்லை. தவறானவர்கள் படத்தை வெளியிடுவது தான் வசூல் விபரம் தெரியாமல் போவதற்கு காரணம். தமிழகத்தில் இருக்கும் அனைத்து விநியோகஸ்தர்களும் மாஃபியா கும்பல்கள் தான். தரமான படங்களை எடுத்து வெளியிட்டால் அவை நிச்சயம் வெற்றி பெறும் என்றார் தேனப்பன்.
பணம்நான் திமுகவும் இல்லை, அதிமுகவும் இல்லை. ரெட் ஜெயன்ட்டுக்கு 5 சதவீதம் தான் கிடைக்கும். ரூ. 1 கோடி பண்ணினால் வெறும் ரூ. 5 லட்சம் தான் அவர்களுக்கு கிடைக்கும். அவங்க உண்மையாக, நேர்மையாக தொழில் பண்ணுகிறார்கள். அவங்கள போட்டு வேறு மாதிரி டிராக் திருப்பி கொஞ்ச நாளில் கம்பெனியை மூடும் அளவுக்கு அவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேற மாதிரி இருக்காங்க என தேனப்பன் கூறினார்.
சேவைAk62, Lyca:டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லைகா: திட்டித் தீர்க்கும் அஜித் ரசிகர்கள்ரெட் ஜெயன்ட்டுக்கு பல கோடி வருதுனு நினைக்கிறாங்க. அப்படி எல்லாம் கிடையாது. உண்மையிலேயே சினிமாவுக்கு நல்ல சேவை தான் அவங்க செய்றாங்க. அதற்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய முக்கிய கோரிக்கை ஆகும். சினிமா நல்லா இருக்க வேண்டும் என்றால் அவங்கள மாதிரி நாலு பேர் இருந்தால் தான் நல்லா இருக்க முடியும். இல்லை என்றால் அந்த மாஃபியா கும்பலிடம் சென்றால் தமிழ் திரையுலகம் கஷ்டப்படும். தமிழகத்தில் இருக்கும் அனைத்து விநியோகஸ்தர்களும் மாஃபியா கும்பல்கள். அதனால் படத்தின் வசூல் விபரம் தெரிவது இல்லை. சத்தியமாக சினிமா துறை நன்றாக இருக்கிறது என்றார் தேனப்பன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.