Suriya, Sachin Tendulkar: சத்தமே இல்லாமல் சச்சின் டெண்டுல்கரை சந்தித்த நடிகர் சூர்யா…

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நடிகர் சூர்யா திடீரென சந்தித்துள்ளார்.

நடிகர் சூர்யாதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவரது நடிப்பில் தற்போது சூர்யா 42 திரைப்படம் தயாராகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா பல்வேறு கெட் அப்களில் நடித்து வருகிறார். தற்காலிகமாக சூர்யா 42 என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ​ Ajith, AK 62: அஜித்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா? வாயை பிளக்க வைக்கும் ஒரு காரின் விலை!​
சூர்யா 42சூர்யா 42 திரைப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ள நடிகர் சூர்யா, தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம், டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.
​ Rajinikanth: ரஜினிகாந்தின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா? தீயாய் பரவும் தகவல்!​
மும்பையில் சூர்யாபிள்ளைகளின் படிப்புக்காக நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி விட்டனர். சமீபத்தில் நடிகை ஜோதிகா புதிதாக வாங்கிய நாய்க்குட்டியின் வீடியோவை வெளியிட்டு வைரலானார். இந்நிலையில் நடிகர் சூர்யா ஒரு போட்டோவை போட்டு மொத்த சோஷியல் மீடியாவிலும் ட்ரெண்ட்டாகி வருகிறார். மும்பையில் உள்ள நடிகர் சூர்யா, கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்துள்ளார். ​ Nivashini: பிங்க் நிற புடவையில் பிக்பாஸ் நிவாஷினி… அசத்தல் போட்டோஸ்!​
சச்சினுடன் சந்திப்புசச்சின் டெண்டுல்கரின் பக்கத்தில் பவ்யமாக நின்றப்படி எடுத்துள்ள போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள சூர்யா, அன்பும் மரியாதையும் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த சந்திப்பு மும்பையில் நேற்று நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த போட்டோதான் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
​Anjali Nair: தவறாக நடக்க முயன்றார்.. ரயிலில் இருந்து தள்ளி கொல்ல முயன்றார்.. வில்லன் நடிகர் மீது நடிகை அஞ்சலி நாயர் புகீர் புகார்!​
ட்ரெண்டிங்#SachinTendulkar #Suriya என்ற ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்ட்டாகி வருகின்றன. சூர்யாவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இதுக்கு மேல வேற என்ன வேண்டும் என கொண்டாடி வருகின்றனர். அதேநேரத்தில் சச்சின் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஏதாவது கெஸ்ட் ரோல் கொடுக்கப் போகிறாரா என்றும் கேட்டு வருகின்றனர். நடிகர் சூர்யா சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.​ Seeman: விஜய் டிவியில் சீமான்… ‘ஆத்தாடி என்ன உடம்பே’… பாட்டுப்பாடி அசத்தல்!​
Suriya meets Sachin

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.