அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் ரொனால்டோ! அல் நஸர் வெளியிட்ட புகைப்படங்கள்


நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையாக பயிற்சி செய்யும் புகைப்படங்களை அல்-நஸர் அணி வெளியிட்டது.

ரொனால்டோ கோல் மழை

கடந்த 9ஆம் திகதி நடந்த அல்-வெஹ்டா அணிக்கு எதிரான போட்டியில் அல்-நஸர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

அந்த அணியின் 4 கோல்களையும் ரொனால்டோவே அடித்தார். இந்த வெற்றியின் மூலம் அல் நஸரின் புள்ளிகள் 37 ஆக உயர்ந்தது.

எனினும் அல் நஸர் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ரொனால்டோ/Ronaldo

@AlNassrFC_EN(Twitter)

அடுத்த போட்டி

இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் 5வது இடத்தில் இருக்கும் அல்-டாவ்வுன் அணியை அல்-நஸர் எதிர்கொள்கிறது.

இதற்காக அந்த அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரொனால்டோ/Ronaldo

@AlNassrFC_EN(Twitter)

குறிப்பாக ரொனால்டோ ஆக்ரோஷமாக பயிற்சி மேற்கொண்டார்.

இதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள அல்-நஸர் போட்டிக்கு ஆயத்தமாவதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த போட்டியைப் போலவே இன்றைய போட்டியிலும் ரொனால்டோ கோல் மழை பொழிவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.    

ரொனால்டோ/Ronaldo

@AlNassrFC_EN(Twitter)

ரொனால்டோ/Ronaldo

@AlNassrFC_EN(Twitter)

அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் ரொனால்டோ! அல் நஸர் வெளியிட்ட புகைப்படங்கள் | Al Nassr Posted Ronaldo Training Session Photos

@AlNassrFC_EN(Twitter)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.