இலங்கைக்குள் நுழையும் றோ! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரை வைத்து நகர்த்தப்படும் திட்டம்(Video)



தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக  உடலை காட்டிய அந்தக் காலகட்டத்தில், அவரின் மறைவுச் செய்தியை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் உறுதிப்படுத்தியிருந்தார். 

ஆனால்,  தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்த அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் எவையுமே புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவுச் செய்தியை அங்கீகரிக்கவில்லை. 

இவ்வாறானதொரு சூழலில் தான், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்றும், தன்னுடன் தொடர்பில்  இருக்கின்றார் என்றும் விரைவில் வருவார் என்றும் கூறியிருக்கின்றார். 

கிட்டத்தட்ட 13 வருடங்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் தற்போதைய படம் என்று ஒரு புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றது.  எனினும் இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் உறுதிசெய்ய முடியவில்லை என்பதும் சுட்டக்காட்டத்தக்கது. 

பல சர்ச்சைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தொடர்பான செய்தி குறித்து மிக விரிவாக ஆராய்கின்றது எமது நிஜக்கண் விசேட தொகுப்பு.

முழு விபரங்களை அறிந்து கொள்ள காணொளியை பார்வையிடுக,



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.