ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, 3வது நாளாக நேற்று மாலை கருங்கல்பாளையம் சுப்ரமணியசுவாமி கோயில் அருகே ராஜகோபால் தோட்டம் பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜவினர், எடப்பாடி பிரசாரத்தில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாமல் பெயரளவுக்கே பங்கேற்று வருகின்றனர். இதில், ஈரோடு ராஜகோபால் தோட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பாஜ கொடியும் இல்லை. பாஜ.வினரும் ஓரிருவர் மட்டுமே பங்கேற்றனர். மோசிக்கீரனார் வீதியில் நடந்த பிரசாரத்தில் பாஜ மாவட்ட செயலாளர் வேதனாந்தம் அதிமுகவிற்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லாதது போல கூட்டத்திலிருந்து ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்.
