ஏற்காடு: ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ரோஜா மலர்களுக்கு என்றே அரசு தோட்டகலை, மலை பயிர்கள் துறை சார்பில் ரோஜா தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரோஜா தோட்டத்தில் வருடத்திற்கு 10 முறை பூக்கள் பூக்கும். தற்போது பூங்காவில் வைத்துள்ள அனைத்து செடிகளிலும் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகிறது.
வெள்ளை, மஞ்சள், சிகப்பு போன்ற வண்ணங்களில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகிறது. இவை சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக காட்சியளிக்கிறது. இந்த பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்துரசித்துச்செல்கின்றனர்.