சென்னை: நடப்பாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 16வது சீசனுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. போட்டியானது அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவஹாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. அதன் முழுவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 16வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கின்றன. […]
