கர்நாடக பட்ஜெட் 2023: ராமர் கோயில் சர்ப்ரைஸ்… தெற்கே உதிக்கும் பிரம்மாண்டம்!

கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வர இருப்பதால் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டும் தான் பாஜக ஆட்சி செய்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா உட்பட பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை அமைக்க போராடி வரும் நிலையில், கர்நாடகாவில் மீண்டும் தங்கள் ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால், பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பட்ஜெட்டை பாஜக தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், கர்நாடகா ராமநகரம் மாவட்டத்தில், அயோத்தியை போல மிக பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டபடும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

அதானி- மோடி உறவு; ஆதாரம் எல்லாம் ரெடியா இருக்கு- ராகுல் காந்தி சஸ்பென்ஸ்!

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தின் உயர்கல்வி அமைச்சர் அஸ்வத் நாராயண்; அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை போலவே கர்நாடக மாநிலத்திலும் மிகப்பெரிய அளவில் கட்டப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடு அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெற்று இருக்கும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருப்பதை போல கட்டப்படும் ராமர் கோயில் கர்நாடகாவில் கட்டபட்ட பிறகு, அதனை திறந்து வைப்பதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத்தை பாஜக அழைக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

இதற்கு கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலை குறிவைத்து இந்துக்களின் வாக்குகளை நோக்கியே இது போன்ற அறிவிப்பை பாஜக முன்னெடுக்கிறது எனவும் குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.

திரிபுரா தேர்தல் விறுவிறு: 2023-ல் காத்திருக்கும் ட்விஸ்ட்- வியூகம் வகுத்த பாஜக சிஎம் மாணிக் சஹா!

மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கர்நாடகாவில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களை புனரமைக்கும் பணியை கர்நாடக அரசு செய்யும் எனவும் உறுதி அளித்துள்ளார். இதற்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் அறிவித்தார்.

ராய்ச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனவும், இந்த பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளுக்கான முன்னோட்டமாக இருக்கும் எனவும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார். அதோடு, மாநிலத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 11236 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.

விவசாயத்திற்கான இலவச கடன் 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். பெங்களுருவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களுக்காக கூடுதல் கழிப்பிடங்கள் கட்டப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.