சென்னை: கர்நாடக மாநில வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர் ராஜாவின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
