குஜராத் பாஜக எம்எல்ஏ ஹர்திக் படேலுக்கு எதிராக கைது வாரண்ட்

குஜராத் பாஜக எம்எல்ஏ ஹாா்திக் படேலுக்கு எதிராக சுரேந்திரநகா் மாவட்ட நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

2017 நவம்பர் 26 அன்று குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள ஹரிபார் கிராமத்தில் ஹர்திக் படேல் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தினார். இதனையடுத்து, ஜனவரி 12, 2018 அன்று திரங்காத்ரா தாலுகா காவல் நிலையத்தில் அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

image
இந்த நிலையில்,  சுரேந்திரநகரில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் டிடி ஷா, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக படேலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தார். பிப்ரவரி 2ம் தேதியன்று அந்த உத்தரவின் மூலம், படேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு திரங்காத்ரா தாலுகா காவல் நிலைய அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிப்ரவரி 11 ம் தேதி காவல் நிலையத்திற்கு வந்ததாக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

image
2019-இல் காங்கிரஸில் இணைந்த ஹாா்திக் படேல், 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலின்போது அக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். அந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் அகமதாபாதின் விரம்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் மீது குஜராத்தில் இரு தேசத் துரோக வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.