மதுரை: ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முறையாக நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். மகா சிவராத்திரியையொட்டி, மதுரை மீனாட்சியை தரிசிப்பதுடன், இரவு கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவிலும் கலந்துகொள்கிறார். குடியரசு தலைவர் வருகையையொட்டி, மதுரை, கோவையில் 5அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவராக பதவி ஏற்றபிறகு, திரவுபதி முர்மு பர் முதன்முறையாக நாளை (18-ந் தேதி) தமிழகம் வருகிறார். […]
