சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

நேற்று இடம்பெற்ற இந்த (16) நிகழ்வில் சாய்ந்தமருது முன்னாள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.எம். நியாஸ் , பொது சுகாதார உத்தியோகத்தர்கள், அலுலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

கல்முனை மாநகர சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் ,மாநகர சுகாதாரப்பிரிவினூடாக பல்வேறு சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.