#சென்னை | பிரபல மொபைல் ஆப் மூலம் பாலியல் தொழில்! குறி வைக்கப்படும் இளம் பெண்கள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

சென்னையில் ஆன்லைன் லோகாண்டோ ஆப் மூலம் பாலியல் தொழில் நடப்பதாகவும், இளம் பெண்களை குறி வைக்கும் இந்த குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான அந்த தகவலின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சட்டவிரோத பாலியல் தொழிலை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

இருந்த போதிலும், கை நிறைய சம்பளத்துடன் உடனடியாக வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அப்பாவி ஏழை பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் நடப்பதாக சொல்லப்படுகிறது.

அண்மையில் வடபழனி கனகப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை செய்த போலீசார், அங்கு விபசாரத்தில் தள்ளப்பட்டிருந்த 7 பெண்களை மீட்டனர்.

மேலும், சந்தேகமே எழாதா வகையில் நடித்து, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த கணைதாஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கோவாவில் இருந்து கொண்டு ‘லோகாண்டோ’ என்ற இணையதளம் மூலம் விளம்பரம் செய்து, வெஸ்லி என்ற தரகர், ஆன்லைன் மூலம் சென்னையில் பாலியல் தொழில் செய்து வருவது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், அந்த பாலியல் கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் வாடகைக்கு வீடுகளை எடுத்து அத்தனை சொகுசு விடுதியாக மாற்றி, பாலியல் தொழிலை செய்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சட்டவிரோத லோகாண்டோ ஆப் மற்றும் இணையதளத்தின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு சென்னை காவல்துறையினர் பரிந்துரை செய்ய முடிவு செய்து உள்ளதாக வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.