சென்னை விமான நிலையம்; இப்படி ஒரு சோதனையா? நஷ்டத்தில் நாட்டிலேயே நம்பர் ஒன்!

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. உள்நாட்டு விமான நிலையம், சர்வதேச விமான நிலையம் என படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் மிகவும் பிஸியான விமான நிலையமாக காட்சி அளித்து வருகிறது.

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஜனவரி மாதம் மட்டும் 12,380 விமானங்கள் வந்து சென்றுள்ளன. அதில் 17 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் படிப்படியாக பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் மட்டும் 5.5 கோடி பயணிகளை ஈர்க்க தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வருவாய் விஷயத்தில் புரட்டி போடும் அளவிற்கு சென்னை விமான நிலையம் செல்லும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மத்திய அரசு ஷாக் தகவல்

அப்படி ஒரு தகவல் மத்திய அரசிடம் இருந்து கிடைத்துள்ளது. சென்னை விமான நிலையம் பெரிய நஷ்டத்தில் இயங்கி வருகிறதாம். அதுவும் இந்தியாவிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருப்பது தான் வேதனை. விஷயம் இதுதான். இந்தியாவில் உள்ள 124 விமான நிலையங்களில் 2021-22ஆம் ஆண்டில் ஈட்டிய வருவாய் விவரங்கள் குறித்து மாநிலங்களவையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நீரஜ் டங்கி கேள்வி எழுப்பினார்.

சென்னை தான் நம்பர் ஒன்

அதற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவில் அதிகம் நஷ்டம் அடைந்த விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. கிட்டதட்ட 189.85 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மொத்தமும் இதேநிலை

அதுவே 2020-21ஆம் நிதியாண்டில் 278.63 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தான் தமிழ்நாட்டின் மற்ற விமான நிலையங்களும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில்,

மதுரை விமான நிலையம் – ரூ.41.20 கோடிகோவை விமான நிலையம் – ரூ.28.51 கோடிதிருச்சி விமான நிலையம் – ரூ.19.17 கோடிதூத்துக்குடி விமான நிலையம் – ரூ.13.97 கோடிபுதுச்சேரி விமான நிலையம் – ரூ.12.36 கோடிசேலம் விமான நிலையம் – ரூ.5.61 கோடி

புதிய திட்டங்கள் தேவை

என்ற அளவில் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களை லாப நோக்கில் மாற்றும் வகையில் புதிய திட்டங்கள் தேவைப்படுகின்றன. வல்லுநர்கள் உதவியுடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு நிலைமையை மாற்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.