தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து 20.02.2023 முதல் 31.03.2023 வரை பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 25 ஏரிகளுக்கு தொடர்ந்து 20 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதம் 51.840 மில்லியன் கன அடி தண்ணீர் விட்டும், புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள நேரடி பாசனத்திற்கு 20 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதம் 51.840 மில்லியன் கன அடி தண்ணீர் விட்டும், ஆக மொத்தம் 40 நாட்களுக்கு 103.68 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 5108 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
