பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் ஒருபோதும் ஒளிபரப்பப்பட்டிருக்கக் கூடாது என்றும், அது உண்மைக்கு மாறாக உள்ளதாகவும் இங்கிலாந்து எம்.பி பாப் பிளாக்மேன் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கலவரத்தின்போது, அப்போதைய முதலமைச்சராக இருந்த மோடி, அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்து, தன்னால் இயன்றதை செய்ததாகவும், பிளாக்மேன் குறிப்பிட்டுள்ளார்.
பிபிசியின் ஆவணப்படம் மிகவும் வருந்தத்தக்கது என தெரிவித்த அவர், பிபிசியின் நிகழ்ச்சி நிரல் இங்கிலாந்து-இந்திய உறவை சீர்குலைக்கவிருப்பது போன்று தெரிவதாகவும், இது பெரிய அவமானம் என தான் நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆவணப்படம் புனைவுகள் நிறைந்தது என்றும், பிபிசி மேற்பார்வையில், இது வெளிப்புற அமைப்பால் தயாரிக்கப்பட்டதாகவும் இங்கிலாந்து எம்.பி பிளாக்மேன் தெரிவித்துள்ளார்.