புதுடில்லி, பி.பி.சி.,யின் பல்வேறு துணை நிறுவனங்களால் காட்டப்பட்டுள்ள வருமானம் மற்றும் லாபத்துக்கும், இந்நிறுவனம் இந்தியாவில் செயல்படும் அளவுக்கும் ஒத்துப்போகவில்லை என, வருமான வரித் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., ஊடக நிறுவனம், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில், பி.பி.சி., நிறுவனம் ௨௦௦௨ல் குஜராத்தில் நடந்த கலவரம் குறித்தும், அப்போதைய முதல்வர் மோடி குறித்தும் விமர்சித்து, இரு ஆவணப்படங்களை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புதுடில்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி., நிறுவன அலுவலகங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள், கடந்த ௧௪ல் துவங்கி மூன்று நாட்களுக்கு ஆய்வு நடத்தினர்.
இதற்குப் பின், மத்திய நேரடி வரிகள் வாரியம், பி.பி.சி., பெயரை குறிப்பிடாமல் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்நிறுவன ஊழியர்களின் வாக்குமூலம், ‘டிஜிட்டல்’ நகல்கள் மற்றும் ஆவணங்கள் என முக்கிய ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
இதன் அடிப்படையில், பரிமாற்ற விலை ஆவணங்கள் தொடர்பான பல்வேறு முரண்பாடுகள் மற்றும் வித்தியாசங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement