புடின் கூட்டாளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: மர்மமான முறையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள்


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கூட்டாளியான மெரினா யாங்கினா 16வது மாடி கட்டிடத்தின் ஜன்னலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

புடினின் கூட்டாளி உயிரிழப்பு

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித் துறைக்கு தலைமை அதிகாரியாக செயல்பட்ட மெரினா யாங்கினா(Marina Yankina), செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள குடியிருப்பின் 16வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக தி இண்டிபெண்டண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கலினின்ஸ்கி பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் நடைபாதையில் புதன்கிழமை காலை 8 மணிக்கு முன்னதாக மெரினா யாங்கினா இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

புடின் கூட்டாளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: மர்மமான முறையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் | Russian Defence Official Marina Yankina Dead

குடியிருப்பின் 16 வது மாடியில் மெரினாவின் உடைமைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அங்கு அவர் வசிக்கவில்லை என்றும், அது கணவரின் குடியிருப்பு என்றும் மெட்ரோ செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.

மர்மமாக உயிரிழக்கும் புடின் கூட்டாளிகள்

மெரினா யாங்கினா  ரஷ்யாவின் ஐந்து புவியியல் பட்டாலியன்களில் ஒன்றான மேற்கு இராணுவ மாவட்டத்தின் நிதி இயக்குநராக இருந்து வந்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் உக்ரைனின் தாக்குதலை தொடங்கியதில் இருந்து அதன் தளபதிகளை புடின் பலமுறை மாற்றியுள்ளார். இதற்கிடையில் தற்போது அவரது இறப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

புடின் கூட்டாளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: மர்மமான முறையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் | Russian Defence Official Marina Yankina DeadGetty Images

சமீபத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரஷ்ய மேஜர் ஜெனரல் விளாடிமிர் மகரோவ் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்த சில நாட்களுக்கு பிறகு, மெரினா யாங்கினா மரணம் ஏற்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.