பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளும் பாஜ சார்பில் நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு முக்கிய திட்டங்களை முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். நிலம் இல்லாத பெண் பண்ணை தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படும். ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
தெருநாய்களை பராமரிப்பது மற்றும் பொதுமக்கள் அவற்றை தத்தெடுப்பதற்காக பிரத்யேக சாப்ட்வேர் உருவாக்கப்படும். இதன் மூலமாக தங்கள் பெயர்களை பதிவு செய்து நாய்களை தத்தெடுக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது” என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில், மேகதாது திட்டம் பெங்களூருவுக்கு குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கானதாகும். தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதில் வெற்றி பெறுவதற்காக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேகதாது வழக்கில் விரைவில் வெற்றி பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அணை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கவும் மாநில அரசு தயாராக இருக்கிறது என்றார்.