மாஸ்கோ, ரஷ்ய ராணுவ அமைச்சகத்தின் நிதித் துறையில், தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த மரினா யாங்கினா, 58, அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியில் இருந்து விழுந்து, மர்மமான முறையில் பலியானார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த ஓராண்டாக போரிட்டு வருகிறது.
இந்த போருக்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவிக்கும் நிதி தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும் துறையில் தலைமை அதிகாரியாக மரினா யாங்கினா பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கலினின்ஸ்கி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டிய சாலையில் இவரது உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
இவர், தன் கணவருடன் வசித்த 16வது மாடியில் இருந்து விழுந்து பலியானது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடி னால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் மகரோவ், சமீபத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் தற்கொலை செய்தார்.
இந்நிலையில், ராணுவ அமைச்சகத்தின் தலைமைப் பிரிவில் பணியாற்றி வந்த மரினாவும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement