
விருதுகளுக்கு தயாராகுங்கள் – ஜிவி பிரகாஷை வாழ்த்திய தமன்
நடிகர், இசையமைப்பாளர் என பயணித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடிப்பில் வாத்தி படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படம் இன்று(பிப்., 17) வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக அடியாத்தி வாத்தி பாடல் ரசிகர்களின் ரீங்காரமாய் மாறி உள்ளது. இந்நிலையில் ஜிவி பிரகாஷை வாழ்த்தி உள்ளார் சக இசையமைப்பாளரான தமன்.
அவர் கூறுகையில், ‛‛விருதுகளுக்கு தயாராகுங்கள் அன்பு சகோதரர் ஜிவி பிரகாஷ் அவர்களே… வாத்தி மற்றும் சார் படத்திற்கு வாழ்த்துகள். அடுத்தமுறை உங்களுடன் இணைய முயற்சி செய்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜிவி பிரகாஷ்.