Adjustment in Tamil cinema: படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்கள்… மவுனம் கலைக்கும் முன்னணி நடிகைள்… அதிர்ச்சியில் கோலிவுட்!

அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ் குறித்து முன்னணி நடிகைகள் அடுத்தடுத்து பேசி வருவது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அட்ஜெஸ்ட்மெண்ட்சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சிலர் சினிமாவில் நுழைந்தால் போதும் என அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகே சொல்லிவிட்டு சினிமா ஆசையில் எதிர்காலத்தை தொலைத்து விடுகின்றனர். சிலர் அப்படி ஒரு வாய்ப்பே வேண்டாம். திறமைக்கு வாய்ப்பு கிடைத்தால் கிடைக்கட்டும் என ஒரே வார்த்தையில் நிராகரித்து விடுகின்றனர். சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பழக்கம் உள்ளது.
​ Vaathi, Sir, Dhanush: ‘வாத்தி’ மட்டுமில்ல ‘Sir’ கூட… தெலுங்கிலும் பட்டையை கிளப்பும் தனுஷ்!​
ஸ்ரீரெட்டிகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பலரும் படுக்கைக்கு தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கூறி நடிகை ஸ்ரீரெட்டி பகீர் குற்றச்சாட்டுக்களை கூறினார். தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரது பெயர்களை கூறி தனக்கு நேர்ந்த அநியாயத்தை அம்பலப்படுத்தினார். ஸ்ரீரெட்டியின் இந்த குற்றச்சாட்டால் பல பிரபலங்களின் முகத்திரை கிழிந்தது.
​ Bakasuran: பகாசுரன் படத்தில் உள்ள மைனஸ் இதுதான்… புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!​
பாலியல் தொல்லைஅதன்பிறகும் அட்ஜெஸ்ட்மெண்ட் சர்ச்சை குறையவில்லை. மாறாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. மீடூ அமைப்பின் மூலம் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறினர். ஆனாலும் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது குறையவில்லை.
​ Bakasuran: வெறித்தனம்… நிச்சயம் டிஸ்டர்ப் பண்ணும்… பகாசுரன் டிவிட்டர் விமர்சனம்!​
முன்னணி நடிகைகள்சமீப காலமாக முன்னணி நடிகைகள், மூத்த நடிகைகள், சின்னத்திரை நடிகைகள், விஜேக்கள் என பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகின்றனர். சூட்டோடு சூடாக யார்? என்னவென்று கூறாமல் தாங்கள் ஒரு நிலையை அடைந்த பின்னரே கூறி அஜெஸ்ட்மெண்ட் விவகாரங்கள் குறித்து வாய் திறந்து வருகின்றனர். அந்த வகையில் அனுஷ்கா, சினிமாவுக்கு வந்த புதிதில் வாய்ப்புக்காக தன்னை அட்ஜெஸ்ட் செய்யுமாறு கூறியதை வெளிப்படையாக கூறினார்.
​ Vaathi Review: ‘வாத்தி’ பிளாக் பஸ்டர்தான்… குவியும் பாஸிட்டிவ் விமர்சனங்கள்.. குஷியில் தனுஷ் ஃபேன்ஸ்!​
நயன்தாராஇதேபோல் கீர்த்தி சுரேஷும் தான் சந்தித்த இதுபோன்ற அனுபவங்களை கூறினார். சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நடிகை நயன்தாராவும் தன்னை படுக்கைக்கு அழைத்த சம்பவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை அஞ்சலி நாயர், தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் வாய்ப்புக்காக சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தன்னை படுக்கைக்கு அழைத்ததையும் அதனை தான் மறுத்ததையும் தெரிவித்துள்ளார்.
​ AK 62: ஒன்னுல்ல.. ரெண்டு… அஜித்தை திக்குமுக்காட வைத்த மகிழ் திருமேனி… வேற லெவல்!​
வரலட்சுமிவரலட்சுமியின் அப்பா சரத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். அவரது மகளுக்கே இந்த நிலைமை என்றால் சினிமா கனவில் வரும் சாதாரண பெண்களின் நிலை என்னவாகும் என பேசத் தொடங்கியுள்ளனர் சமூக வலைதள வாசிகள். தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் கலாச்சாரம் கறும்புள்ளியாக விழு முன் திரைத்துறையினர் இதனை தடுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்., இல்லையெனில் ஆண்டுக்கு 20000 கோடி ரூபாய்க்கு மேல் பிஸ்னஸ் கொடுக்கும் தமிழ் சினிமாவின் மானம் காற்றில் பறந்துவிடும். ​ Bakasuran: தனுஷ் அண்ணனா இது… பகாசுரன் படத்தில் செல்வராகவன் கெட்டப் இதுதான்.. ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!​
Nayanthara Varalaxmi

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.