Anasuya Bharadwaj: செருப்பால அடிப்பேன்: கோபத்தில் கொந்தளித்த 'புஷ்பா' பட நடிகை.!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் அனுசுயா. இவர் கடந்த காதலர் தினத்தன்று தனது கணவர் பரத்வாஜுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர் அடித்த கமெண்டிற்கு அனுசுயா பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

தொலைக்காட்சி தொகுப்பாளனியாக தனது கெரியரை துவங்கியவர் நடிகை அனுசுயா பரத்வாஜ். இவர் ‘புஷ்பா’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ’புஷ்பா’ படத்தில் வில்லன் சுனிலின் மனைவியாக நடித்திருந்தார். இந்தப்படத்தில் இவரின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இவர் தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அனுசுயா, கடந்த காதலர் தினத்தன்று தனது கணவர் பரத்வாஜூடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ‘உங்களுடனான வாழ்க்கை மிகவும் வேடிக்கையான ரோலர் கோஸ்டர் சவாரி’ என்ற கேப்ஷனோடு பதிவிட்டிருந்தார்.

Suriya: தமிழில் பதிவிட்ட சச்சின்.. மராத்தியில் கமெண்ட் அடித்த சூர்யா: தீயாய் பரவும் புகைப்படம்.!

அவரின் இந்த போட்டோவிற்கு நெட்டிசன் ஒருவர், பணத்திற்காக தான் நீங்கள் இவரை திருமணம் செய்து கொண்டீர்களா என்று கமெண்ட் அடித்தார். இதனால் கடுப்பான அனுசுயா, ‘பணம் அவரிடம் மட்டும் தான் உள்ளதா? என்னிடம் இல்லையா? இதை நீ சொன்னதற்காக கன்னத்தில் போட்டுக் கொள். இல்லையென்றால் உன் கன்னத்தில் செருப்பால் அடிப்பேன் என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

Vaathi: அப்போ தனுஷ்.. இப்போ நீங்களா.?: சர்ச்சையை கிளப்பும் ‘வாத்தி’ இயக்குனரின் பேச்சு.!

மேலும், ‘மஞ்சள் காமாலை வந்தவனுக்கு உலகமே மஞ்சள் ஆகத்தான் தெரியும், பணம் மட்டுமே புத்தியை கொண்டவர்களுக்கு எல்லாமே தவறாகத்தான் தெரியும், தயவுசெய்து மாறுங்கள் என்றும் விளாசி தள்ளியுள்ளார். அவரின் இந்த பதிலடி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

View this post on Instagram A post shared by Anasuya Bharadwaj (@itsme_anasuya)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.