"BBC ஆவணப்படம்: ஊடக துறையை அவமானப்படுத்துவது போல் உள்ளது"- பிரிட்டன் எம்.பி பேட்டி!

குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி ஒளிபரப்பியிருக்கக் கூடாது என பிரிட்டன் எம்.பி BOB BLACKMAN தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பிபிசியின் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரி ஆய்வு இன்றுக்கு முடிவுக்கு வந்தது. இந்த மூன்று நாள் வருமான வரி ஆய்வின் முடிவில், பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பிபிசி அலுவலகங்களில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர். பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது அங்கு நடைபெற்ற கலவரம் குறித்து பிபிசி இரண்டாவது ஆவணப்படம் வெளியிடப்பட்ட பிறகு இந்த வருமானவரி ஆய்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இது என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகளோ பிபிசியின் கணக்கு வழக்குகள் குறித்து பலமுறை கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் ஆனால் அதற்கு சரியான பதில் இல்லை எனவும் தெரிவித்தனர்.
image
இந்நிலையில் பிபிசி ஆவணப்படம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பிரிட்டன் எம்.பி BOB BLACKMAN, “பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது” என்று கூறி பாராட்டினார். தொடர்ந்து பிபிசியின் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம் குறித்து பேசிய அவர், “உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் உருவான அந்த ஆவணப்படத்தை பிபிசி தயாரிக்கவில்லை. வெளியில் உள்ள ஒரு அமைப்பு தான் பிபிசியின் மேற்பார்வையில் தயாரித்தது” எனக் கூறினார்.
image
மேலும் மோடிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அவருக்கு எதிராக இருக்கும் இந்த ஆவணப்படத்தை பிபிசி ஒளிபரப்பி இருக்கக்கூடாது என்றும், இந்த ஆவணப்படம் ஊடக துறையை அவமானப்படுத்துவது போல் உள்ளது என்றும் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.